கொழும்பில் காரை மோதித்தள்ளிய ரயில்! பெண்கள் படுகாயம்
accident
corona
sri lanka
train
people
By Shalini
கொழும்பு − கிருலபனை − பூர்வாராம ரயில் கடவையில், நேற்று மாலை கார் ஒன்றுடன் ரயில் மோதுண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொடை ரயில் நிலையத்திலிருந்து உரிய சமிக்ஞை கிடைக்காத நிலையில், பாதுகாப்பு கடவை மூடப்படவில்லை என ரயில் கடவை பாதுகாவளர் தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள வேலைத்தளத்திலிருந்து மஹரகம பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பாதுக்கைக்கு சென்ற ரயிலே காருடன் மோதியுள்ளது. சுமார் 8 அடி தூரத்திற்கு கார் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் கிருலபனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி