கர்தினால் அப்படி கூறவே இல்லை : முற்றாக மறுக்கிறது கத்தோலிக்க திருச்சபை
Colombo
Cardinal Malcolm Ranjith
Easter Attack Sri Lanka
By Sumithiran
ஷானி அபேசேகரவை (Shani Abeysekera) குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளராகவோ அல்லது ரவி செனவிரத்னவை (Ravi Seneviratne )பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்,(Cardinal Malcolm Ranjith)ஒருபோதும் குறிப்பாகக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இன்று(20) தெரிவித்தார்.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாள்பவர்களை மாற்றவும், அவர்களை மீண்டும் அவர்களின் அசல் பதவிகளில் அமர்த்தவும் மட்டுமே கர்தினால் ரஞ்சித் விரும்பினார்," என்று அருட்தந்தை ஜூட் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்களை புரிந்து கொள்ளும் திருச்சபை
ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் மீது சில குற்றச்சாட்டுகள் இருப்பதை திருச்சபை புரிந்துகொண்டதாக அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்