அமெரிக்க வர்த்தகப் போரில் சிக்கியுள்ள கார்னி: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் டொராண்டோவிற்கு வருகை தரும் பல உலகளாவிய முதலீட்டாளர்களை வரவேற்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் ஊடாக கனடாவின் பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு முக்கியம் எனக் கூறும் 160-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில், இந்த நடவடிக்கையில் கார்னி ஈடுபட்டுள்ளார்.
கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் நிர்வாகியும் மத்திய வங்கித் தலைவருமான கார்னி, திங்களன்று பிளாக்ராக் (BLK.N) உள்ளிட்ட பங்கேற்பாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தியதான தெரிவிக்கப்படுகிறது.
721 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு
முக்கியமாக இன்று நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், எதிர்கால முதலீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், முக்கிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என கனேடிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
தேவையற்ற நிர்வாகத் தடைகளைக் குறைத்து, சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 டிரில்லியன் கனடிய டாலர் (721 பில்லியன் அமெரிக்க டொலர்) முதலீடுகளை ஈர்ப்பதாக கார்னி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |