யாழில் பரிதாபமாக பலியான தச்சு தொழிலாளி
யாழில் (Jaffna) தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி, ஏழாலை பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஆதார வைத்தியசாலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தனது வேலைத்தலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவேளை திடீரென அவரது நெஞ்சில் தச்சு பட்டறையின் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும், பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
