கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (Ciaboc) வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பணமோசடி தடுப்புச் சட்டம்
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
97 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
