மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு (Mervyn Silva) எதிரான வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் (SLRC) சட்டவிரோதமாக நுழைந்து, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
சிறையிலுள்ள சந்தேக நபர்
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரான மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த வழக்கை ஜூன் 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அத்தோடு, அன்றைய தினம் சந்தேக நபர் சிறையிலிருந்தாலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
