முன்னாள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிரான வழக்கு..! ஏப்ரல் 29 இற்கு ஒத்திவைப்பு
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது இன்று (29.01.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மொதற கடற்றொழில் துறைமுகத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, அன்றைய காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விசாரணை
இந்த வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 1 மணி நேரம் முன்