உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (2901.2026) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த விலை உயர்வு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கான காரணங்கள்
அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதேவேளை இலங்கையில் நேற்று (28) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 11,000 ரூபாயால் அதிகரித்த நிலையில் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 371,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்பட்டது.
தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |