விமல் வீரவன்ச மீதான வழக்கு ஒத்திவைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவி வகித்த செயிட் அல் ஹுசைன் இளவரசர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (02.11.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அமைச்சர் விமல் வீரவன்ச
கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவி வகித்த செயிட் அல் ஹுசைன் இளவரசர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சூழவுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், வீரகுமார திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |