நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக பாய்கிறது வழக்கு
Parliament of Sri Lanka
SJB
R M Ranjith Madduma Bandara
Ministry of Finance Sri Lanka
By Sumithiran
நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் அவர் பங்கேற்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடலுக்கு சமுகமளிக்காத செயலாளர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்காததால் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்