காலி முகத்திடலில் கெசினோ சூதாட்ட நிலையம்: கொண்டுவந்த புதிய திட்டம்
காலி முகத்திடலில் கெசினோ நிலையமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரகலய தளம்
அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருக்கின்றார் என கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ‘அரகலய தளம்’ அரகலய மக்களை பழிவாங்குவதற்காக கெசினோ நிலையமொன்றுக்காக வழங்கப்படுவது பாரிய தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
நுழைவுக் கட்டணம்
இதேவேளை, கெசினோவைத் திறக்கும்போது 10 பில்லியன் செலுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்களை இலக்கு வைத்து கெசினோ நிலையங்கள் திறக்கப்படமாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர்வாசி ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும், மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்டணம் 200 அமெரிக்க டொலராக இருக்கும்.
உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளை ஆதரிப்பதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். இந்த சூதாட்ட விடுதிகள் வெளிநாட்டினரை மட்டுமே குறிவைக்கின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |