நாட்டை உலுக்கிய எல்ல பேருந்து விபத்து : வெளியான காரணம்
பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ள நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கையை, அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரிடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல - வெல்லவாய வீதியில் 24ஆவது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விசாரணைக்குழு நியமனம்
குறித்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த குழுவின் அறிக்கையின்படி, விபத்துக்குள்ளான பேருந்து முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், தடையாளி அமைப்பில் குறைபாடுகள் இருந்தமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
