வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்மானிக்கப்பட்ட வீதங்கள்
அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை ஆதரிக்கும் அதேவேளையில் நடுத்தர கால அளவில் பணவீக்கத்தை 5 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நுண் பொருளாதார முன்னேற்றங்கள், உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் சாத்தியமான அபாயங்களை கவனமாக மதிப்பீடு செய்த பின்னர் வாரியம் இந்த முடிவை எடுத்ததாக மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடுகின்றது.
Monetary Policy Decision: The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels
— CBSL (@CBSL) May 28, 2024
Standing Deposit Facility Rate (SDFR) - 8.50%
Standing Lending Facility Rate (SLFR) - 9.50%
Statutory Reserve Ratio (SRR) - 2.00%
For more details -… pic.twitter.com/cPJVQ2YWql
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |