இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்...!
இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) கோரிக்கை விடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
இன்று (13) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்துமாறு கோரி சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremasinghe) ராஜபக்ச அனுப்பிய கடிதம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல கேள்வி எழுப்பியிருந்தார்.
மறுசீரமைப்பு தொடரும்
அதில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றாரா அல்லது மகிந்த ராஜபக்சவுடன் இருக்கின்றாரா என்பதை அறிய விரும்புகின்றோம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பதிலளிக்கையில், "அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பை ஒத்திவைக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரவில்லை, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை ஒத்திவைக்குமாறுதான் அவர் கோரியுள்ளார்.
மின்சார சபையை விற்கும் எண்ணம் எமக்கு இல்லை, அதுமாத்திரமன்றி இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு எந்தவித ஒத்திவைப்புமின்றித் தொடரும்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |