ஜூலையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது.
குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை கால அவகாசம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும் மின்சார சபை (Electricity Board) அதற்கு கால அவகாசம் கோரியுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான விபரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (Public Utilities Commission) மற்றும் மின்சார சபைக்கு (Electricity Board) துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |