மாத்தறையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க தீர்மானம் : காஞ்சன விஜேசேகர
Matara
Sri Lanka
Ceylon Electricity Board
Kanchana Wijesekera
By Beulah
மாத்தறை கிரிட் துணை மின் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் அதிகரித்து வரும் நீர் மட்டம் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மின்சார விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துப்படி, நிலைமை சீராகும் வரை தற்காலிக மின் தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை மின் நிலையங்கள்
எவ்வாறாயினும், மாத்தறையில் வசிப்பவர்கள் மாற்று துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகுகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி