இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா: இனவாதத்தை கக்கிய இலங்கை ரசிகர்கள் (காணொளி)
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பட்டாசு கொழுத்தி கொண்டாடியதை தாம் ஓர் இனவாதமாக கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு தொலைபேசியின் ஊடாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் காணப்படுகின்ற நல்லுறவை சீர்க்குலைக்கும் ஓர் செயலாகவும் அவர் இதனை கூறியுள்ளார்.
பட்டாசு கொழுத்தி ஆரவாரம்
நேற்றைய தினம் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியை கொண்டாடும் விதமாக இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
குறித்த செயலை கல்வி இராஜாங்க அமைச்சர் ஒரு இனவாதமாக கருதியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான விடயம் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |