உச்சம் தொடுகிறது சீமெந்தின் விலை!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Cement Price in Sri Lanka
By Kanna
மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை
50 கிலோ கிராம் சீமெந்து பக்கெட் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீமெந்து பக்கெற் ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடிக்கு முன்னர்
நாட்டில் நெருக்கடி ஏற்பட முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கட்டின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.