மைத்திரிக்கான தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட 9 தடை உத்தரவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன(Lasantha Alagiyawanna) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) ஆகியோரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கி, வேறு நபர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர் தொடர்ந்த மூன்று வழக்குகளை பரிசீலித்ததன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மைத்திரி உட்பட நால்ருக்கு தடை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரதி துஷ்மந்த(Sarathi Dushmantha), பைசர் முஸ்தபா(Faizer Mustapha) மற்றும் சரத் ஏக்கநாயக்க(Sarath Ekanayake) ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அவர்கள் தரப்பு ஆட்சேபனைகளை ஒக்டோபர் 9ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |