இலங்கை மத்திய வங்கியின் நாணய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்!
இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர், வங்கியின் நாணய சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் நாணய சபையின் செயலாளராக ஜே.பி.ஆர்.கருணாரத்ன என்பவரே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021 செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. ஜே.பி.ஆர் கருணாரத்ன, அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார்.