பணவியல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி!
இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டின் (2024) பெப்ரவரி மாதத்திற்குரிய நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் (15) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைகளுக்கு இணங்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாத பணவியல் கொள்கை முடிவை உருவாக்குவதற்காக இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியத்தால் பரிசீலிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட விடயங்களே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி
பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், முன்னோக்கு பார்வையை வழங்குவதற்காக மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையாகவும் இது விளங்குகின்றது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீதான கணிப்புகளுக்கு ஆபத்துக்களை மதிப்பீடு செய்வதையும் இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது, உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்னணிகளில் நடந்துவரும் மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் வங்கியின் சமீபத்திய பணவியல் கொள்கை முடிவுகளுக்கான காரணத்தை தெரிவிப்பதன் மூலம் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த முயற்சிப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |