தேசியப்பட்டியல் குறித்த மத்திய குழுவின் தீர்மானம் : முடிவை கையிலெடுக்கும் சுமோ
மத்தியக்குழு சுமந்திரன் (M. A. Sumanthiran) கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என சுமந்திரன் எடுத்த முடிவை அவர் ஒரு போதும் மாற்றமாட்டார் என ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் - கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன அணியாக போட்டியிட்ட தலைமை வேட்பாளருமான கே.வி.தவராசா (K.V.Thavarasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கம் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அத்தோடு, கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவானது சுமந்திரனுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட மத்திய குழுவில் சுமந்திரன் தனது ஆதரவை கூட்டி அதன் மூலம் தேசியப்பட்டியலுக்கு தெரிவாகும் சிறுபிள்ளைத்தனமான ஒரு செயற்பாட்டை அவர் மேற்கொள்ள மாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் மாற்று சிந்தனை, பின்னடைவை சந்தித்த தமிழ் மக்கள், மூத்த தமிழ் அரசியல்வாதிகளின் தோல்வி மற்றும் சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பவை தொடர்பில் அவர் விரிவாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |