மின்சார சபையை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி..!
இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்யவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஏரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மின்சார சபையின் மீள் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Cabinet Approval was granted today to commence the restructuring of the Ceylon Electricity Board. A committee will be appointed to give their recommendations within a month from their appointment.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 1, 2022
The revised tariff rates for Renewable Energy Projects was also approved.
22 ஆவது திருத்தத்திற்கும் அமைச்சரவை அனுமதி
இதேவேளை, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான செய்தி, 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..!
