பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை - மின்சார சபை!! நாளை இருளில் மூழ்கும் இலங்கை
முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் இன்று நள்ளிரவில் முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் இதனால் நாளை காலை 08 மணி முதல் மின்சார விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பேச்சவார்த்தை தோல்வி
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் முன்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பின்னர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இருப்பினும், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், தாம் முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தினர் தற்பொழுது அறிவித்துள்ளனர்.
