தலைவர் , பணிப்பாளர் மோதலால் -இரண்டாக பிளவுபட்டது முன்னணி அரச நிறுவனம்
chairman
clash
government office
Director General
By Sumithiran
முன்னணி அரச நிறுவனமொன்றின் தலைவருக்கும் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, குறித்த நிறுவனத்தின் வழமையான கடமைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரண்டு அதிகாரிகளுக்கும் இடையே சில நாட்களாக நிலவி வந்த பிரச்சனை ஊழியர்களுக்கும் பரவி தற்போது நிறுவனமே இரண்டாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் குழுவொன்று இது தொடர்பில் அரச தலைவரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் அரச தலைவரால் நியமிக்கப்படுகிறார் மற்றும் பணிப்பாளர் சட்டவிரோதமாக நியமிக்கப்படுகிறார்.
நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சரும் இது தொடர்பில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
