முடிந்தால் செய்து காட்டுங்கள் - அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால்
சேறு பூசுவதனை விடுத்து முடிந்தால் வேலை செய்து தம்மை தோற்கடித்துக் காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka)அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த சவாலை விடுத்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டு இலங்கை மின்சார சபை 20 பில்லியன் இலாபம் பெற்றது.முடிந்தால் இலங்கை மின்சார சபையை 21 பில்லியன் இலாபம் பெற வைத்து தம்மை தோற்கடிக்குமாறு அவர் அரசாங்க தரப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 67 பில்லியன் பெறுமதியான எரிபொருள் விலை குறைந்து நாட்டு மக்களுக்கு தமது காலத்தில் நிவாரணம் வழங்கியதாக சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முடிந்தால் நாட்டு மக்களுக்கு 68 பில்லியனுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குமாறு சம்பிக்க சவால் விடுத்துள்ளார்.
அதனை விடுத்து நாடாளுமன்ற வரப்பிரசாதத்தின் பேரில் சேறு பூச வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.