சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று பாஸ்பேட் நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று (06) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
8.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்ச- ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இருவரும், கடந்த 23ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்