நாமலின் கைதுக்கு காரணமான நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும்! சாமர சம்பத் வலியுறுத்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, லஞ்சம் கொடுப்பதும் ஒரு குற்றம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பேரணி
இந்நிலையில், இலங்கையில் பல நிதி மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையின் விளைவாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"உண்மையில் அரசாங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குத்தான் உதவுகிறது. அப்பேரணியில் பேசுவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் அதில் பங்கேற்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று சாமர சம்பத் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |