கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு: சமரி அத்தபத்து
இலங்கை(Sri Lanka) மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து(Chamari Athapaththu), விரைவில் ஓய்வு பெறப்போவதாக வெளியான செய்திகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் ஓய்வு பெறும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்க அதற்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இதற்கு பதிலளித்த அவர், கருத்து தெரிவிக்க இது நேரம் இல்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இறுதிப் போட்டி
ஸ்கொட்லாந்துக்கு(Scotland) எதிரான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று(09) நாடு திரும்பியுள்ளது.
மேலும் இந்த சுற்றுப்போட்டிகளில் சமரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம், பெண்கள் ரி20 உலகக் கிண்ண ஏ பிரிவில் அவுஸ்திரேலியா(Australia),நியூசிலாந்து(New Zealand), இந்தியா(India) மற்றும் பாகிஸ்தான்(Pakistan) அணிகளுடன் இலங்கை இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |