அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! கடும் தொனியில் எச்சரிக்கும் மொட்டு எம்.பி

Hambantota SLPP Kumara Jayakody
By Abi Apr 06, 2026 06:22 AM GMT
Report

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகின்ற நிலையில், நிலக்கரி கொள்வனவு மோசடி காரணமாக வருங்காலத்தில் முழு அமைச்சரவையுமே சிறை செல்ல நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றத்தை முன்வைத்துள்ளது. 

அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக உள்ளோம்

அன்றைய தினம் ஊழலுக்கு எதிரானவர்கள் யார், ஊழலுக்குச் சார்பானவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவசர தேவைக்கான முறையான காரணங்கள் எதுவுமின்றி, தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! கடும் தொனியில் எச்சரிக்கும் மொட்டு எம்.பி | Chanaka Warns That Entire Cabinet Could Go To Jail

புதிய நிறுவனம் ஒன்றிற்கு விதிமுறைகளை மீறி விலைமனுகோரல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற நிலக்கரியால் மின்சார உற்பத்தியில் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பான மோசடிகள் குறித்துப் பொறுப்பான அமைச்சருடன் விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக உள்ளோம். அமைச்சர்கள் தவறுகளைத் தெரிந்தே செய்கின்றார்களா அல்லது தெரியாமல் செய்கின்றார்களா என்பது புரியவில்லை.

எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக்காட்டியவுடன் இரகசியமாகத் திருத்திக் கொள்கின்றனர். ஆனால், வெளியில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கின்றனர். ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஊழலை முன்னிலைப்படுத்தியே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்

எதிர்காலத்தில் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

முறையற்ற நிலக்கரி கொள்வனவு மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! கடும் தொனியில் எச்சரிக்கும் மொட்டு எம்.பி | Chanaka Warns That Entire Cabinet Could Go To Jail

இந்த நிர்வாகச் சீர்கேடுகளினால் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

வத்தளையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

வத்தளையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


          

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025