நாடாளுமன்றத்தில் அமைச்சரை சாடிய சாணக்கியன் எம்பி
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடிநீர் வழங்கல் தொடர்பாக கடந்த 10 வருடங்களாக வழங்கப்பட்ட பதிலையே அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07.02.2025) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் இந்த பதிலை அமைச்சின் அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை வாசித்ததாகவும் அவருக்கு குறித்த விடயம் தொடர்பில் போதிய அறிவு இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு போரதீவு பற்று பிரதேசத்தில் மட்டும் மட்டுமின்றி மட்டக்களப்பிலுள்ள சகல பிரதேசங்களிலும் குடிநீர் பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்துடன் ஜீவன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாந்தோட்டையிலிருந்து 40KM தூரத்திற்கு குடிநீர் விநியோக குழாய் வழங்கப்பட்ட நிலையில் பிள்ளையான் அதை தடுத்து நிறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்
இதன் போது குறுக்கிட்ட அரச தரப்பு எம்.பி “ சாணக்கியன் கேட்ட முதல் கேள்விக்கான பதிலை நான் வழங்கியிருந்தேன். இரண்டாவதாக கேட்ட கேள்விக்கான பதிலை இன்று நாடாளுமன்றத்தில் வழங்குவேன். அதை அவர் சரியாக செவிமடுத்திருந்தால் அவருக்கு பதில் கிடைத்திருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சாணக்கியன் “அரசாங்கத்திடம் தற்போது உள்ள குடிநீர் வழங்கல் குழாய்கள் மூலம் எத்தணை கிலோ மீற்றர் தூரத்திற்கு நீர் விறியோகிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |