15 வருடங்களாகியும் மாறாத முள்ளிவாய்க்கால் மக்களின் வேதனை: சாணக்கியன் எடுத்துரைப்பு
2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடினாலும் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் திகதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நேற்றையதினம்(14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அபிலாசை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக தமிழர்களின் அடையாளத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் அமைய வேண்டுமென சாணக்கியன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |