ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்
ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி 29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் வெற்றி பெற்றன.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
புள்ளி பட்டியல்
இதில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.
இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றது. இது 2 அணிகளுக்கும் 4-வது வெற்றியாக இந்த வெற்றி பதிவானது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. 6 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அணிகளின் நிலை
கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் நிகர ஓட்ட விகிதம்(run rate) அடிப்படையில் கொல்கத்தா 2-வது இடத்திலும், சென்னை 3-வது இடத்திலும் உள்ளன.
தலா 6 புள்ளிகள் பெற்ற நிலையில்,நிகர ஓட்ட விகித அடிப்படையில் ஐதராபாத் 4-வது இடத்திலும், லக்னோ 5-வது இடத்திலும், குஜராத் 6-வது இடத்திலும் உள்ளன.
பஞ்சாப், மும்பை மற்றும் டெல்லி அணிகள் முறையே தலா 4 புள்ளிகளுடன் 7,8 மற்றும் 9-வது இடத்தில் உள்ளன.
6 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Here’s how the Points Table looks like after 29 matches of #TATAIPL 2024 🙌
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
Does your favourite team feature in the Top 4? 🤔 pic.twitter.com/R7EPWTGyfR
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |