அதிபர் தேர்தலில் இளம் தலைமைக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு: பசில் உறுதி
இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா என தேர்தலை வைத்து தான் பார்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் அதிபர் தேர்தல் நிலையம் இன்று (10) பத்தரமுல்ல ரஜமால் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”அதிபர் தேர்தல் நடவடிக்கை அலுவலகங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும்.
அதிபர் வேட்பாளர்
எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதிபர் வேட்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. ஆணைக்குழு அதன் வேலையை செய்கிறது. நாங்கள் எங்கள் வேலையினை செய்கிறோம்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு விரைவில் வேட்பாளரை கண்டுபிடிக்க வேண்டும். இது குறித்து கட்சித் தலைமைக்கு அறிவித்திருக்கிறேன்.
69 இலட்சம் மக்கள்
இளம் தலைமைக்கு வாய்ப்புக்கள் கட்டாயம் வழங்குவோம். இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா என தேர்தலை வைத்து தான் பார்க்க வேண்டும்.
எமது திட்டத்தை வெளியே சொன்னால் அடுத்தவர்களும் அதனையே செய்வார்கள். நாட்டுக்காக நிற்கும் எவருடனும் சேர்ந்து பயணிக்க தயார்.” என தெரிவித்தார்.
இதேவேளை, பசில் ராஜபக்சவிற்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (09) இரவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |