ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா
hospital
corona
chandima weerakody
By Sumithiran
ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் ஹிக்கடுவையில் உள்ள தன்மைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.