தனது 3 வீடுகளில் ஒன்றை ரஞ்சனுக்கு வழங்குகின்றார் சந்திமல்
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, தன்னிடம் இருக்கும் மூன்று வீடுகளில் ஒன்றை கொடுப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மாதிவெல பகுதியில் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து அவர் வெளியேற வேண்டும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இல்லத்திலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் உடமைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், இதற்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கால அவகாசம் இம்மாதம் 20ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட சந்திமல் ஜெயசிங்க,
ரஞ்சன் விடுதலையாகும் நாளில் எனது ஒரு வீட்டில் வசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
ரஞ்சனுக்காக தன்னிடம் இருக்கும் மூன்று வீடுகளில் ஒன்றை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.