சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

India ISRO Chandrayaan-3
By Vanan Sep 23, 2023 01:24 AM GMT
Report

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவ ஆய்வு

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

கனடாவிலும், இலங்கையிலும் “றோ” வின் சதி! வெளியாகும் அதிர்ச்சிகர பக்கங்கள்

கனடாவிலும், இலங்கையிலும் “றோ” வின் சதி! வெளியாகும் அதிர்ச்சிகர பக்கங்கள்

சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ | Chandrayaan 3 Pragyan Vikram Not Responding Isro

இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஓகஸ்டு 23ஆம் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது.

ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் : அமெரிக்கா, சீனா முன்னிலை

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் : அமெரிக்கா, சீனா முன்னிலை

ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.

தொடர்ந்து, அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஒக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷி யான் 6 கப்பல் விவகாரம்! ரணில் எடுத்த அதிரடி முடிவு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷி யான் 6 கப்பல் விவகாரம்! ரணில் எடுத்த அதிரடி முடிவு

உறக்க நிலை 

தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத ஆரம்பத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ | Chandrayaan 3 Pragyan Vikram Not Responding Isro

இதனைத் தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலர் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயற்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

'மத்ஸ்யா 6000' : மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா

'மத்ஸ்யா 6000' : மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா


14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.

இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி (படங்கள்)

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி (படங்கள்)

மீண்டும் ஆராய்ச்சி பணி

இந்த நிலையில் நேற்று (22) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ | Chandrayaan 3 Pragyan Vikram Not Responding Isro

அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வீட்டிலும் விமானம் - சொகுசாக வாழும் மக்கள்

ஒவ்வொரு வீட்டிலும் விமானம் - சொகுசாக வாழும் மக்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011