கனடாவிலும், இலங்கையிலும் “றோ” வின் சதி! வெளியாகும் அதிர்ச்சிகர பக்கங்கள்
இந்திய உளவு அமைப்பான றோ தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக சர்வதேச மட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கனடா நாட்டின் பிரஜையான சீக்கியத் தலைவர் ஒருவரை கனடா மண்ணில் வைத்து படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சுமத்தப்பட்டு, மிகப் பெரிய இராஜதந்திரப் போர் ஒன்று மேற்குலகிற்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாகியுள்ளது.
5 ஐஸ் என்று அழைக்கப்படுகின்ற அமெரிக்கா, கனடா, பிரித்தானியா. நியூசிலாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து அந்தக் கொலை சம்பந்தமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டு ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபக்கம், இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான படுகொலைகள் விடயத்திலும், இந்திய உளவு அமைப்பான றோவை தொடர்புபடுத்தி, செய்திகள் ஆங்காங்கு வெளியாக ஆரம்பித்துள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும், அவர்கள் எடுத்துவைக்கின்ற அரசியல் நகர்வுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்கின்ற அடிப்படையில், இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் சற்று ஆழமாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்,