சந்திரயான் 3 இன் விஞ்ஞானிகளின் கல்வி தகைமைகள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
புவி வட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23 ந் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.
அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.
மேலும், நிலவின் தென் துருவத்தை ஆராய சென்ற முதல் நாடு என்ற சாதனையையும் அங்கிருந்து ஆய்வு செய்து தரவுகளை நாட்டுக்கு அனுப்பிய சாதனையையும் இந்தியா படைத்திருந்தது.
இந்த வெற்றிகரமான பணியின் பின்னணியில் உள்ள முக்கியமானவர்கள் கல்வித் தகுதிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ் சோம் நாத்
எஸ் சோம் நாத், விண்வெளித் துறையின் செயலாளர் மற்றும் இஸ்ரோ விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் கட்டமைப்புகள், இயக்கவியல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
முன்னதாக, சோம்நாத் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குநராகவும், திருவனந்தபுரம் திரவ இயக்கத் திட்ட மையத்தின் (LPSC) இயக்குநராகவும் பணியாற்றினார்.
எம் சங்கரன்
UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் (URSC) இயக்குநரான எம் சங்கரன், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அவர் இப்போது URSC எனப்படும் ISRO செயற்கைக்கோள் மையத்தில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
டாக்டர் வி நாராயணன்
வி நாராயணன் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குனர் ஆவார்.
டாக்டர் வி நாராயணன் ஐஐடி காரக்பூரில் பழைய மாணவர் மற்றும் 1989 இல் கிரையோஜெனிக் இன்ஜினியரிங்கில் எம்டெக் முதல் இடம் பெற்றார்.
விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
IIT காரக்பூரில் இருந்து MTech இல் முதலிடம் பெற்று இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்றார் அவருக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் ஆஃப் சயின்ஸ் (doctor of science) பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
பி வீரமுத்துவேல்
பி வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக உள்ளார்.
இவர் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் பள்ளிப் படிப்பையும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவையும் முடித்துள்ளார்.
வீரமுத்துவேல் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், வேறு பொறியியல் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். ஐஐடி மெட்ராஸில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கல்பனா காளஹஸ்தி
சந்திரயான்-3 திட்டத்திற்கான துணை திட்ட இயக்குநராக இருந்த கல்பனா காளஹஸ்தி, கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார்.
மேலும் ஐஐடி-காரக்பூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் (Aeronautical Engineering) பெற்றார்.