ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Shalini Balachandran
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்சா ஜயவர்தன(Sulakshana Jayawardana) தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கை மின்சார சபை(Ceylon Electricity Board) தற்போது மின்சாரக் கட்டணம் தொடர்பான வரைபை தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இறுதி வரைவு அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபை முன்மொழிவை சமர்ப்பித்த பின்னர், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த மார்ச் மாதம்(04)ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்