நாட்டின் பரீட்சை முறைகளில் அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய புரட்சி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Education
Nalinda Jayatissa
By Dilakshan
முறையான கலந்துரையாடல்களின் பின்னர், அனைத்து பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தத்தில் விரிவான பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் இன்று (26) வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தரமான முடிவு
இந்த நிலையில், கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் நிரந்தரமான முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 10 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி