தங்கம் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
change
today
gold
price
By Vasanth
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது.
இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.33,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,230-க்கு விற்பனை ஆகிறது.