இலங்கையின் விசா முறைமையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் விசா (On arrivel Visa) பெறுவதற்கான வரிசை மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வருவதற்கு இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்நிலை விசா முறைமை நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் ஆரம்பமானதே இதற்கு காரணமாகும்.
மேலும், பாதுகாப்பு காரணங்களால் இலங்கைக்கு வருவதற்கு விசா பெற முடியாத 14 நாடுகள், அந்த நாடுகளில் வசிப்பவர்கள் இணையம் மூலம் விசா பெற வேண்டும் அல்லது அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசா பெற வேண்டும்.
பயணிகளின் வருகை
இந்நிலைமை மீண்டும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சியைப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பருவம் வரவுள்ளதால், இவ்வருடம் 23 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |