இலங்கை கிரிக்கெட் துறையில் மாற்றம் : வெளியான தகவல்

Shalini Balachandran
in விளையாட்டுReport this article
இலங்கை (Sri Lanka) கிரிக்கெட் துறையில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி வரும் நிலையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கிரிக்கெட் உட்கட்டுமானங்களில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் குறுகிய கால தீர்வுத் திட்டங்கள் மூலம் சவால்களுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நலன்
தனிப்பட்ட நலன்களுக்காக சிலர் மேற்கொள்ளும் அனைத்து விதமான செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் இதயத் துடிப்பு கிரிக்கெட் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் கிரிக்கெட் அனைவரையும் ஒன்றிணைக்கும் எனவும் விளையாட்டு என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
