பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lanka
Birthday
Digital Birth Certificate
By Dharu
ஒரு குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அந்தக் குழந்தை பெறும் தேசிய அடையாள அட்டை எண்ணை அந்தப் பிறப்புச் சான்றிதழில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சீரமைக்கும் அஞ்சல் துறை
பிறப்புச் சான்றிதழ் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில் அஞ்சல் துறையுடன் இணைந்து தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் செயல்பாட்டில் மூன்றாம் தரப்பினர் தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி