வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம்

Fuel Price In Sri Lanka Vijitha Herath National Fuel Pass School Holiday
By Sumithiran Apr 05, 2026 05:02 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் எனவே அரச ஊழியர்களின் புதன்கிழமை விடுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 புதன்கிழமை விடுமுறை

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம் | Changes To Wednesdays Public Holiday

எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார்.

தீவக ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு நிறுத்தம்: வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தீவக ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு நிறுத்தம்: வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறை

 நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். இதனால் உடனடி நடவடிக்கையாக QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம்.

வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம் | Changes To Wednesdays Public Holiday

புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். QR மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால், அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம்.

எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே அந்த நேரத்தில் அத்தகைய முடிவுகளை எடுத்தோம். ஆனால் இப்போது அச்சப்படத் தேவையில்லை. ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன என அவர் தெரிவித்தார். 

நள்ளிரவு முதல் உச்சத்தை தொடும் சமையல் எரிவாயு விலை

நள்ளிரவு முதல் உச்சத்தை தொடும் சமையல் எரிவாயு விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026