தீவக ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு நிறுத்தம்: வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Jaffna Ceylon Teachers Service Union Northern Province of Sri Lanka Teachers Joseph Stalin
By Independent Writer Apr 05, 2026 02:54 PM GMT
Report
Courtesy: linton

 யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட கடல் கடந்த தீவகப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்காத வடமாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டு ஆபத்தான மற்றும் சவாலான சூழலில் பணியாற்றும் பின்வரும் பாடசாலைகளின் ஆசிரியர்கள் தற்போது கொடுப்பனவுகளை இழந்துள்ளனர்

 நெடுந்தீவு: 8 பாடசாலைகளைச் சேர்ந்த 92 ஆசிரியர்கள்

நயினாதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள்

அனலைதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள்.

எழுவைதீவு: 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள்.

 கல்வி அமைச்சின் 01/2024 (1) இலக்க பாடசாலை வகைப்பாட்டு சுற்றறிக்கையின் ஊடாக, இப்பாடசாலைகள் "கஷ்டப்பிரதேச" தரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

"கடல் வழிப் பயணம்" என்ற மிக முக்கியமான காரணி

இணைய வசதி, நீர் வசதி மற்றும் பேருந்து போக்குவரத்து போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவக ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு நிறுத்தம்: வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு | Northern Province Island Teachers Allowance Issue

எனினும், இப்பாடசாலைகளுக்குச் செல்வதற்கு அவசியமான "கடல் வழிப் பயணம்" என்ற மிக முக்கியமான காரணி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அதிகாரிகள் கல்வி அமைச்சுக்கு தரவுகளை வழங்கும்போது, தீவகப் பாடசாலைகளின் புவியியல் சார் இடர்பாடுகளைச் சரியாகச் சுட்டிக்காட்டத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது 

[

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015