தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!
CID - Sri Lanka Police
Colombo
Kilinochchi
ITAK
By Sumithiran
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி வட்டாரத்தின் அமைப்பாளருமான தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை வழங்கிய அழைப்பாணையில், எதிர்வரும் 2026.04.07 அன்று காலை 10:00 மணிக்கு கொழும்பிலுள்ள விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக விசாரணைக்கு அழைப்பு
தயாநந்தன் ஜெயச்சித்திரா, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவால் (TID) மூன்றாவது முறையாகவும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் குரல்களை நசுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி