அநுர அரசின் ஆட்டம் ஆரம்பம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிரித்தானிய சனலுக்கு ஆசாத் மௌலானா(Azad Maulana )வழங்கிய அறிக்கைகளைக் குறிப்பிட்டு, பொது பாதுகாப்பு அமைச்சில் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்
ஆவணப்படத்தின் கூற்றுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) நாளையதினம் (12) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Thalduwa) இதனை உறுதிப்படுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |