நல்லூரில் சிவப்பு சால்வைக்காரர்களால் ஏற்பட்ட குழப்பம்
நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா இன்று நடைபெற்று சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும்போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று தெரிவித்து சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.
சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள்
புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒலிவாங்கியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும் அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


